.

வணக்கம்! உங்களை வரவேற்கிறேன்!பார்க்க ஜெயா TV...படிக்க... நமது M.G.R நாளிதழ்.தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களை வரவேற்கிறது.

Wednesday, July 14, 2010

கோவை கண்டன பொதுக்கூட்டம்

புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்களின் ஆணைப்படி 13.07.2010 அன்று கோவையில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றிற்கு காரணமான திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுகூட்டதிற்கு தூத்துக்குடி பெருநகர செயலாளர் S.ஏசாதுரை தலைமையில் தூத்துக்குடி நகர தொண்டர்கள் கலந்து கொண்டனர்.மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, July 3, 2010

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்கள் ஆணைப்படி இன்று தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தியும் ,பாதாள சாக்கடை திட கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை நகரின் மத்திய பகுதியில் அமைப்பதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டதிர்க்கு மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் திருமதி ஜெனிபர் சந்திரன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.மவ்வட செயலாளர் பள்ளத்தூர் டி முருகேசன் ,தொகுதி செயலாளர் VPR.ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

Friday, July 2, 2010

நகர நிர்வாகிகள் கூட்டம்

புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்களின் ஆணைப்படி இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி அம்மா திருமண மஹாலில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டதிற்கு பெருநகர செயலாளர் திரு.S.ஏசாதுரை அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பள்ளத்தூர்.D.முருகேசன் ,தொகுதி கழக செயலாளர் V.P.R.ரமேஷ் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏரல் S.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, July 1, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூலை 3 இல் ,திருசெந்தூருக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் திருசெந்தூர் செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி அண்ணா திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மாவட்ட பொறுப்பாளர் திருமதி ஜெனிபர் சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்பாட்டத்திற்கு ,கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

இவண்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்

Tuesday, June 29, 2010

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பொது வேலைநிறுத்தம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் திரும்ப பெறகூறியும் வரும் ஜூலை 5 இல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் (strike) நடைபெறும் என்று புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளர்கள்.இந்த வேலை நிறுத்ததிற்கு கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது.எனவே,இந்த
வேலை நிறுத்ததிற்கு பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவண்
ஏ.பி.டேனியல்
அம்மாவின் முரட்டு பக்தன்

Sunday, June 27, 2010

ஆழ்ந்த இரங்கல்

27-06-2010 அன்று தூத்துக்குடி பெருநகரம் 6 வது வார்டு பாசறை பொருளாளர் நண்பர் பாலா அவர்கள் குற்றாலம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நகர பாசறை செயலாளர் நம்பி ராஜன் அவர்கள் தன்னுடையஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறது.

Thursday, June 24, 2010

டாக்டர் - நகர பாசறை செயலாளர் சந்திப்பு

24-06-2010 அன்று மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் S. வெங்கடேஷ் அவர்கள் தென்காசி இல் நடைபெற்ற நெல்லை புறநகர் அம்மா பேரவை இணை செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.தூத்துக்குடி நகர பாசறை செயலாளர் நம்பிராஜன் அவர்கள்
மரியாதை நிமித்தமாக டாக்டர் அவர்களை சென்று சந்தித்து ஆசி பெற்றார் .இந்த சந்திப்பின் போது Ex. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி அவர்கள் உடனிருந்தார்.